புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு

புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். இதற்கு Fast Stone Photo Resizer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. குறிப்பாக படங்கள் அனைத்தையும் ஒரே அளவிற்கு மாற்றிவிடுவதன் மூலம் அனைவரையும் ஈர்க்கலாம். இது support செய்யும் பைல்கள் JPEG, BMP, GIF, PNG, TIFF and JPEG2000.

 

வீடியோவை ஓடியோவாக மாற்றம் செய்வதற்கு

வீடியோ கோப்புகளை MP3 ஓடியோ கோப்புகளாக மாற்றம் செய்வதற்கு Free Video to MP3 Converter என்ற மென்பொருள் உதவி புரிகிறது.
இந்த மென்பொருள் மூலம் வீடியோவை பல்வேறு போர்மட்டான ஓடியோ கோப்புகளாக மாற்ற முடியும். மேலும் வீடியோவிலிருந்து ஓடியோவை தனியாக பிரித்தெடுக்கும் வசதியும் உள்ளது.
இந்த மென்பொருள் விண்டோஸ் 7, விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களில் செயல்படக்கூடியது.

 

அதிக வசதிகள் கொண்ட VLC மீடியா பிளேயர் VLC 2.0.0 RC1

கணணியில் விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டிருக்கும் போதிலும் வீடியோ, ஓடியோக்களை இயக்குவதற்கு அதிகளவானோரால் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC மீடியா பிளேயர் ஆகும்.

விண்டோஸ் மீடியா பிளேயரில் நிறைய வீடியோ போர்மட்களை பார்க்க முடியாது. அவ்வாறு பார்க்க வேண்டுமெனில் கொடெக் மேலதிகமாக நிறுவ வேண்டும். ஆனால் VLC மீடியா பிளேயரில் அதிகளவு வீடியோ, ஓடியோ போர்மட்களை இயக்க முடியும்.

இப்பொழுது மேலும் பல வசதிகளுள் VLC 2.0.0 RC1 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பழைய பதிப்பை பயன்படுத்துபவர்கள் இப்பொழுது இந்த புதிய பதிப்பை நிறுவி அதன் பயன்களை பெறலாம்.

 

கணணி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு!!

கணணியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணணி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதற்கு System Explorer என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இதற்கு முதலில் குறிப்பிட்ட சுட்டியில் சென்று மென்பொருளை தரவிறக்கி, கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் தோன்றும் விண்டோவில் ப்ரோகிராம்களின் தொடக்கங்கள் குறித்த தகவல்கள், எக்ஸ்ப்ளோரர், IE துணை நிரல்கள், Uninstallers, சேவைகள், இயக்கிகள், இணைப்புகள் மற்றும் திறக்கப்பட்ட கோப்புகள் பற்றி விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

 

கம்யுட்டரின் அனைத்து விவரங்களும் அறிந்துகொள்ள

இந்த சின்ன சாப்ட்வேரானது நமது கம்யுட்டரின் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது.2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு  உங்கள் கம்யுட்டரின் மொத்த ஜாதகமும் அதில் வந்துவிடும். இதில் மேல்புறம் சிறு சிறு ஐ-கான்கள் இருக்கும்.

 

அடோப் ரீடரின் புதிய பதிப்பு Adobe Reader X

அடோப் ரீடரின் புதிய பதிப்பான அடோப்ரீடர் X வெளியிடப்பட்டுள்ளது, இந்த புதிய அடோப் ரீடர் X ஆனது, மேலும் பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது, பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக உள்ளது என அடோப் நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய பதிப்புகளை விட இந்த அடோப்ரீடர் X ஆனது, மிகவும் சிறப்பாகவும். கூடுதல் திறனுடையதாகவும் உள்ளது. இந்த அடோப் ரீடர் மூலமாக நாம் இதுநாள் வரை pdf பைல்களை பார்க்க மட்டுமே முடிந்தது ஆனால் இந்த அடோப்ரீடர் X மூலமாக pdf பைல்களை உருவாக்கவும் முடியும் . மேலும் இந்த அடோப் ரீடர் X -ல் கூடுதலாக பாதுகாப்பு வசதியும் உள்ளது.

 

கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

 

பைல்களைச் சுருக்கும் Zip Folder

இணையத்திலிருந்து அடிக்கடி பைல்கள் மற்றும் மென்பொருள்களை பதிவிறக்கம் செய்பவரா நீங்கள்? அப்படியானால் ஸிப் பைல்கள் பற்றி நிச்சயம் அறிந்திருப்\ர்கள். இந்த பைல்களைச் சுருக்கும் முறையானது இணைய பயனர்களுக்கு மிக உபயோகமான ஒரு கண்டுபிடிப்பென்றே சொல்லலாம். ஏனெனில் இந்த ஸிப் பைல்கள் ஒரு பைலின் அளவை கணிசமாகக் குறைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரு பைலை வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் கூட பறிமாற முடிகிறது.

 

Anti Virus ( AVG )

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்
 

 

Adobe Reader

உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்

 

ஸ்கைப் (Skype) புதிய பதிப்பு

உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் வசதியைத் தருவதில் ஸ்கைப் அப்ளிகேஷன் தொகுப்பு முன்னணியில் உள்ளது. இதில் P2P (peertopeer) என்னும் தொழில் நுட்பம் கையாளப்படுகிறது. தொலைபேசிக் கட்டணமாக அதிகம் செலுத்தும் சுமையிலிருந்து விடுபட பலரும் இதனையே பயன்படுத்தி வருகின்றனர்.
 

 

விஎல்சி ப்ளேயர் (VLC Player)

இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தெரியாதவர்களுக்காக புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்களிடம் உள்ள ஒலி மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப் பார்க்க கேட்க முடியும்.

 

யுட்யுப் டவுண்லோடர் (YouTube Downloader)

இந்த மென்பொருள் மூலம் யுட்யுப படங்களை தரவிறக்கி காண முடியும்.
இந்த மென்பொருள் இப்பொழுது யுட்யுப் மட்டும் இல்லாமல் டெயிலி மோசன், யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது.
 

 

பழுதடைந்த CD / DVD களை இயக்க

மென்பொருள் உலகில் தகவல்களைப் பராமரிப்பதற்கு அடிக்கடி நகல் எடுத்துவைத்துப் பயன்படுத்துகிறோம். அப்படி நகல் எடுத்து வைப்பதற்கும், படி எடுப்பதற்கும் CD / DVD களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவற்றில் பழுதேற்பட்டு 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட CD / DVD களைப் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. கணினியில் இவற்றை இயக்கிப் பார்க்கவும் இயலாமல் போகிவிடுகிறது.
 

 

DVD படத்தை வெட்டியெடுக்க

DVD Cutter என்பது ஒரு எளிய சிறிய மென்பொருள். ஒரு DVD யில் ஏற்றப்பட்டுள்ள படக் கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நமது கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
DVD Cutter மூலம் ஒரு .VOB கோப்பின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து தனியாகப் பதிவு செய்திட இயலும். ஒரு திரைப்படத்தில் இருந்து குறிப்பிட்ட நகைச்சுவைக் காட்சியையோ, அழகான காதல் காட்சியையோ, நகைச்சுவையையோ கணினியில் பதிவு செய்வதற்கு இந்த மென்பொருள் உதவும்.
 

 
DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
அங்கத்தவர்

விளம்பரம்
பிந்திய பின்னூட்டங்கள்
இணைப்பு நிலையில்
எங்களிடம் 126 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]