altகணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரத்தை;
ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.

கணினியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து; எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது. அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய; கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.

கணினிகளின் வகைகள்:
எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பலவித அளவுகளில் கணினிகள் உருவாக்கப் பெற்று, அவைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன.

அவையாவன:
1. Personal -Computers;
Desktop - Pc
Tower - Pc
Laptop - Pc
Hand held - Pc
Network - Pc
(PC - Personal Computer - பிரத்தியேக கணினி என பொருள்படும்)

2. Mini - Computers: இது ஒரு டிபாட்மென்ரில் பாவிப்பது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

3. Mainfram - Computers: பெரிய நிறுவனங்களில் பாவிப்பது. இதன் மூலம் பல ஆயிரம் கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

4. Super - Computers: நாசா போன்ற பெரிய ஆராச்சி நிலையங்களில் பாவிப்பது. வேகத்தில் கூடியதும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரு செக்கண்டில் செய்யக்கூடியது.

இந்த எலெக்ரொனிக் (System Unit) இயந்திரத்தை உடம்பு எனவும், அதனை இயக்கும் (Operating System) ஒபறேற்ரிங் சிஸ்ரம் எனும் புறோக்கிறாமை உயிர் எனவும் அழைப்பர். உயிர் புகுத்தப்பெறாவிடில் உடலான இயந்திரம் இயங்காது. இந்த இயந்திரத்தில் உள்ள உறுப்புகளை Hard Ware "வன் பொருள்" எனவும்; இதில் (Install) உள்ளூட்டல் செய்யப்பெற்ற Operating System த்தையும் Application softwar யும் Soft Ware "மென் பொருள்" எனவும் அழைப்பார்கள்.

இந்த எலெக்ரொனிக் இயந்திரத்திற்கு மனித மொழி தெரியாது, ஆனால் மின்சாரம் பாயும் போது ”on” "1" என்பதையும் மிசாரம் இல்லாத பொழுது ”off” "0" என்பதனை மட்டும் உணரக்கூடியது. இதனை ஆதாரமாக வைத்தே இதனை இயக்கும் Soft Ware என்னும் மென்பொருள் Operating System எழுதப் பெற்று Install செய்கின்றார்கள். அதன் பின்னரே மனித மொழியை கணினி புரிந்து செயல்படுகின்றது. இந்த Soft Ware எழுதுவதற்கென்றே பல கணினி மொழிகள் உருவாக்கப் பெற்றுள்ளன (C++, Java, Pascal போன்றவை).

ஆக்கம்: கணபதிப்பிள்ளை கனகரத்தினம் {CCNP, MCSE (4.0/2K/2K3) and A+}

பின்னூட்டங்கள்  

 
+1 #7 Muthu BSc 2011-12-02 13:36
கணபதிப்பிள்ளை கனகரத்தினம் avarkalukku

NanRikal.

{CCNP, MCSE (4.0/2K/2K3) and A+} ithukku enna artham
Quote
 
 
+2 #6 s.riyas 2011-06-12 12:59
உங்களது கணனி தொடர்பான சந்தேகங்களை இற்கு அனுப்புவதன் மூலம் உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்..
Quote
 
 
+2 #5 shanmugam 2011-01-03 17:34
Dear Sir, Yours Subjects are very Useful for my level of persons, i learning MCSE training but its very difficult So please suggest me like website or any metrials send to my mail id sir
i m BSC CS Graduate now searching Good Job
Quote
 
 
+2 #4 sheik 2010-12-21 15:03
Thank you for infomation.
Quote
 
 
+2 #3 Shahul 2010-12-21 14:59
easy, important msg sir Thanking You.....
Quote
 
 
+2 #2 s.abdul samathu 2010-12-05 14:50
vanakkam ungaludaya bathippu ennaku meguntha uthaviyaga irunthau ungaludaya bathippugal ennudaya email id-kku kidaikumaru thalmaiudan ketu kolkiren
Quote
 
 
+2 #1 rb94 2010-10-31 08:50
thanks
Quote
 

புதிய பின்னூட்டம்

அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.


பாதுகப்பு இலக்கம்
Refresh

 

DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
அங்கத்தவர்

விளம்பரம்
பிந்திய பின்னூட்டங்கள்
இணைப்பு நிலையில்
எங்களிடம் 107 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]