altமின்னஞ்சல் சேவைகளில் முன்னோடியான யாஹூ மெயில் சேவையானது பல நவீன வசதிகளுடன் தற்போது வெளிவந்துள்ளது. 2005 ஆம் ஆண்டின் பின்னர் தனது 279 மில்லியன் பாவனையாளர்களுக்காக யாஹூ மேற்கொண்டுள்ள
பாரிய மாற்றம் இதுவாகும். சமூக வலைப்பின்னல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் வசதிகளானவை:

அதிவேகமான செயற்பாடு - ஜீ மெயில் மற்றும் ஹொட்மெயில் சேவையினை விடவும் முன்னரை விட இருமடங்கு வேகத்திலும் இயங்குமென யாஹூ உத்தரவாதமளிக்கின்றது.

சமூகவலைப்பின்னல் தொடர்பு - யாஹூ மெயிலில் இருந்தவாறே பேஸ்புக் மற்றும் டுவிடரில் அப்டேடிங் செய்யும் வசதி. மேலதிகமாக உடனடி மேசேஜிங் IM ( Instant messaging ) மற்றும் குறுந்தகவல் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்பொக்ஸில் இருந்தவாறே படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்வையிடல் - இன்பொக்ஸில் இருந்தவாறே பிக்காஸா (Picasa) பிளிக்கர் (Flickr) மற்றும் யூடியூப் (YouTube) இணையத்தளங்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிடும் வசதி.

இலகுவாக மின்னஞ்சல்களைத் தேடுதல் - பாவனையாளர் தனக்குத்தேவையான மற்றும் முக்கியமான மின்னஞ்சல்களைத் தேடும் வசதி. திகதி, அனுப்பியவர், கோப்புக்கள் ( Attachment ) ஆகியவற்றின் அடிப்படையில் மின்னஞ்சல்களை தேடிப்பெற முடியும்.

ஸ்பேம்களில் இருந்து பாதுகாப்பு - ஸ்பேம்களில் இருந்து உச்ச பாதுகாப்பு அளிக்கின்றது.

கூகுள், மைக்ரோசொப்ட் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக யாஹூ சற்று பின் தள்ளப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் இத்தகைய மாற்றங்களினூடாக அது இழந்த தன் இடத்தினை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பின்னூட்டங்கள்  

 
+1 #5 pream 2012-11-06 07:14
happey
Quote
 
 
+1 #4 muthugowtham 2012-06-07 13:14
alagana enayathalam.....
Quote
 
 
+1 #3 k.m.ramesh babu 2012-04-26 10:39
this e-mail page very usefull of our life. then all is well thank uou for yahoo
Quote
 
 
+1 #2 senthil.ka 2011-12-22 13:58
innaya virumbum anbu thozhan ka.senthil
Quote
 
 
+2 #1 Nakkeeran 2010-12-25 14:44
யாகூ செய்தி குழுவில் பாமினி ஒருங்கு குறியில் இடும் செய்திகள் உறுப்பினர்களுக்கு சேரும் போது அது குழம்பி விடுகிறது. காரணம் யாகூ UFT8 எழுத்துருவை ஆதரிக்காதாம். இதற்கான தீர்வு ஏதாவது இருக்கிறதா?
Quote
 

புதிய பின்னூட்டம்

அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.


பாதுகப்பு இலக்கம்
Refresh

 

DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
அங்கத்தவர்

விளம்பரம்
பிந்திய பின்னூட்டங்கள்
இணைப்பு நிலையில்
எங்களிடம் 175 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]