altஇன்றைய போட்டோஷாப் பதிவில் Magic Wand Tool பற்றி பார்க்கலாம் முதலில் ஏதாவது ஒரு படத்தை திறந்து இந்த டூலை கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் நீங்கள் நீக்க வேண்டிய நிறத்தை தேர்வுசெய்துகொள்ளுங்கள்.


இப்போது இதன் மேல்புறம் உள்ள Options Bar -ல் உள்ள Tolerance -ஐ நீங்கள் எவ்வளவு வைக்கின்றீர்களோ அந்த அளவிற்கு நிறத்தை தேர்வு செய்யும். இனி வரும்
பாடங்களில் இந்த டூல் மூலம் என்னவெல்லாம் செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.altalt

இப்போது போட்டாஷாப்பில் பல வண்ண நிறங்களை தேர்வு செய்துள்ளேன். இதில் நாம் முதலில் சிகப்பு நிறத்தை தேர்வு செய்யலாம். Tolerance -சுமார் 25 வைத்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.alt




சிகப்பு நிறம் மட்டும் சரியாக தேர்வாகிஉள்ளது. அதே டூல்
கொண்டு Tolerance -50 ஆக தேர்வு செய்தபோது வரும் படத்தை கீ்ழே பாருங்கள்.alt



இதைப்போலவே Tolerance 75 வைத்த படம் கீழே:-alt



சுமார் 100 வைத்து தேர்வு செய்த படம் கீ்ழே:-alt

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன வென்றால் ஒரு நிறத்தை தேர்வு செய்யும் சமயம் குறைவான அளவு Tolerance வைத்தால் அந்த நிறம் எங்குஉள்ளதே அதுமட்டும் தேர்வாகும். Tolerance அதிகமாக வைக்கும் சமயம்
நாம் தேர்வு செய்யும் நிறத்தை சார்ந்துள்ள நிறமும் தேர்
வாகும். உதாரணத்திற்கு இங்கு தஞ்சாவூர் கோயிலின்
பின்புறம் உள்ள வானத்தின் நிறத்தை தேர்வு செய்து டெலிட்
செய்தபின் Backround கலராக நீங்கள் எதை தேர்வு செய்து
உள்ளீர்களோ அந்த நிறம் வந்துவிடும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.alt




பின்புற நிறம் நீல கலரை தேர்வு செய்துள்ளேன். படம் கீழே:alt




கோபுரத்தின் பின்புறம் நிறம் மஞ்சள் நிறம் மாற்றி உள்ளேன்.படம் கீழே:-altalt


 

பின்னூட்டங்கள்  

 
0 #1 mayu 2010-09-10 23:32
super
Quote
 

புதிய பின்னூட்டம்

அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.


பாதுகப்பு இலக்கம்
Refresh

 

DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
பிந்திய பின்னூட்டங்கள்
Posts Basic
Online Status

My Skype ID
My MSN ID

அங்கத்தவர்

விளம்பரம்

இணைப்பு நிலையில்
எங்களிடம் 34 விருந்தினர்கள் & 9 அங்கத்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]