altபோட்டோஷாப் பாடத்தில் சென்ற வாரம்Magic Wand Tool பற்றி பார்த்தோம்.அதன் தொடர்ச்சியை இந்த வாரம் பார்க்கலாம். நான்சாதாரணமாக இந்த புகைப்படத்தை எடுத்துள்ளேன்.

alt
 
இந்த பெண்ணின் பின் புறம் ஒரு ஏரியோ ஆறோ உள்ளது. அதில்தூரத்தில் படகும் செல்வதை காணுங்கள். இப்போது (Magic Wand Tool ) டூல் கொண்டு இந்த தண்ணீரை கிளிக் செய்து டெலிட் அழுத்தியதும்  உங்கள் பின்புற கலர் நிறத்துடன்(நான் Backround Color  வெள்ளைநிறம் வைத்துள்ளேன்) படம் இந்த மாதிரி தேர்வாகும்
alt
இப்போது Layer-New Fill Layer - Pattern என கீழ்கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.
alt
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் Pattern ஆக எந்த படம் வைத்துள்ளீர்களோ அதை தேர்வு செய்யுங்கள்.புகைப்படத்தை Pattern ஆக மாற்றுவதை முன்பு பாடத்தில் பதிவிட்டுள்ளேன்.
alt
நான் இந்த அருவியை Pattern ஆக தேர்வு செய்துள்ளேன்
alt
இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும். இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் நீங்கள் படத்தை ஒழுங்கு செய்துகொள்ளலாம்.அல்லது மூவ் டூல் கொண்டு படத்தை வேண்டிய இடத்தில் நகர்த்திக்கொள்ளலாம்.
alt
இப்போது அந்த பெண்ணின் பின்உள்ள ஆறு ஆனது அழகிய அருவியின் பின்புலமாக மாறுவதை காணலாம்.
alt
ஸ்லைடரை ஒழுங்காக நகர்த்தியபின்வந்த படம்
கீழே:-
alt
அவ்வளவுதாங்க. ரொம்ப சிம்பிளாக இருக்கு இல்ல...நீங்களும் உங்களுடைய புகைப்படத்தை பின் புறம் உள்ள நிறத்தை நீக்கி விட்டு வேண்டிய படத்தை வைத்துக்கொள்ளுஙகள்.
 

பின்னூட்டங்கள்  

 
+2 #2 firdous 2010-09-23 13:13
Hi i just interest to use adobe photo shop so yr explain is usefull for me
Quote
 
 
0 #1 nprupan 2010-09-12 09:09
Quote
 

புதிய பின்னூட்டம்

அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.


பாதுகப்பு இலக்கம்
Refresh

 

DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
பிந்திய பின்னூட்டங்கள்
Posts Basic
Online Status

My Skype ID
My MSN ID

அங்கத்தவர்

விளம்பரம்

இணைப்பு நிலையில்
எங்களிடம் 33 விருந்தினர்கள் & 9 அங்கத்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]