altபோட்டோஷாப்பில் Spot Healing Brush Tool உடன் உள்ள உப டூல் PATCH TOOL ஆகும்.சரி... இதன் மூலம் என்ன செய்யலாம். சேதமான பகுதியை எடுத்துவிட்டு நல்ல பகுதியை பொருத்தலாம். நீங்கள்பிளாஸ்டிக் சர்ஜரியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நமது உடலிலிருந்து நல்லபகுதியை எடுத்து தேவையான பகுதியில் பொருத்துவார்கள். அதுபோல் இந்த டூல் மூலம் நமது முகத்தில் மேடு பள்ளமோ - வெட்டுக்காயமோ - முகப்பருவோ - இருந்தால் இதன் மூலம் ச்ரிசெய்யலாம். சென்ற பதிவில் முகப்பருவை நீக்குவது பற்றி போட்டு விட்டதால் இன்றைய பதிவில் வேறு உபயோகத்தினை பார்க்கலாம். முகப்பரு - வெட்டுக்காயம் - மேடு பள்ளம் நீக்குதலுக்கும் இந்த டூல் மிகவும் பயன்படும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
 .alt

இந்த படத்தில் உள்ள மீன்கொத்திப் பறவை நமக்கு தேவையில்லை.அதை எப்படி நீக்கலாம் என இப்போது பார்க்கலாம்
alt
இந்த டூலை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு சதுரமாக கர்சர் மாறும். பின்னர் படத்தின் அருகே வைத்து வரைந்து கொண்டு வாருங்கள்.கோடு பொட்டது மாதிரி வருகின்றதா....
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
alt
தேவையான பகுதியை முழுவதும் தேர்வு செய்த கோட்டினை நிறைவு செய்யுங்கள்.
alt
இப்போது கர்சரை நடுவில் வைத்து அந்த பகுதியை மெதுவாக நல்ல பகுதிக்கு நகர்த்துங்கள். உங்கள் படம் கண்ணாடி போல் மாறி நல்ல பகுதி வருவதை காண்பீர்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
alt
எந்த இடம் தேவையோ அதுவரை நகர்த்தி பின் என்டர் தட்டுங்கள்.alt

இப்போது பாருங்கள் மீ்ன்கொத்தி காணமல் போயிருக்கும்.alt



இதைப்போல் தேவையில்லாத பகுதியை எடுத்துவிட்டு தேவையான பகுதியை சுலபமாக வைத்துவிடலாம். இதை நீங்களும் செய்து பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.

வேலன்.

பின்னூட்டங்கள்  

 
+1 #4 ramakrishnan 2011-09-13 12:51
நான் தங்கள் தளம் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கின்றேன். மிக்க நன்றி. அதே போல் என்னுடைய கணினியல் CS3 நிறுவி இருக்கின்றேன். ஆனால் என்னால் அதில் தமிழ் எழுத்துக்களை சரிவர கொண்டு வர இயலவில்லை. மேற்குறிகள் எல்லாம் தனிதனியாக இருக்கின்றது. ஆனால் மற்ற அனைத்து அப்ளிகேஷன்களிலும் சரியாக வருகிறது. இதை எப்படி சரி செய்வது என்று சொல்லித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
Quote
 
 
+1 #3 bharanidharan 2010-12-19 07:32
very use ful website thanks for giving this...
Quote
 
 
0 #2 remathi 2010-12-13 11:05
some tools are missing in photoshop,how to install the tools like pentool,patch tool?
Quote
 
 
+1 #1 ராஜா 2010-11-18 21:24
நண்பர் வேலன் அவர்களுக்கு,

நான் தங்கள் தளம் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கின்றேன். மிக்க நன்றி. அதே போல் என்னுடைய கணினியல் CS3 நிறுவி இருக்கின்றேன். ஆனால் என்னால் அதில் தமிழ் எழுத்துக்களை சரிவர கொண்டு வர இயலவில்லை. மேற்குறிகள் எல்லாம் தனிதனியாக இருக்கின்றது. ஆனால் மற்ற அனைத்து அப்ளிகேஷன்களிலும் சரியாக வருகிறது. இதை எப்படி சரி செய்வது என்று சொல்லித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
Quote
 

புதிய பின்னூட்டம்

அன்பான வாசகர்கள் கவனத்திற்கு: இது சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் பகுதி. இதில் இடப்படும் வாசகர் கருத்துக்களுக்கு tamilcomputer.net நிர்வாகம் பொறுப்பேற்காது. இது பின்னூட்டம் என்பதால், தங்கள் கருத்துகளை 6000 எழுத்துகளுக்கு மிகாமல் சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறோம். மேலுல்ல ஆக்கங்களுக்கு அமைவாக உங்கள் பின்னூட்டங்களை எழுதவும். தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யும் வசதியை கொடுத்துள்ளோம். வாசகர்கள் இயன்றவரையில் தமிழில் தங்கள் கருத்துக்களைப் பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறோம்.


பாதுகப்பு இலக்கம்
Refresh

 

DONATE NOW

இச் சேவையினை மேலும் விரிவு படுத்த நீஙகள் உதவுங்கள்

நண்பர்களிடம் பகிர
Facebook Twitter Google Bookmarks RSS Feed 
பிந்திய பின்னூட்டங்கள்
Posts Basic
Online Status

My Skype ID
My MSN ID

அங்கத்தவர்

விளம்பரம்

இணைப்பு நிலையில்
எங்களிடம் 33 விருந்தினர்கள் & 9 அங்கத்தினர்கள் இணைப்பு நிலையில்

Tamil 10 top sites [www.tamil10 .com ]